Feeds:
Posts
Comments

Archive for June 8th, 2011


மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு பொண்ணு ஒன்னு

வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரமா என் மனசு சுத்துதடி
மந்தார மல்லி மரிகொழுந்து செண்பகமே
முனை முறிய பூவே என முறிச்ச தேனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்க கழுதுக்கே பிறை சந்திரன தரலாம்

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகை பூ பந்தலோட வந்தது யாரு
சிறு ஓலையில உன் நினைப்ப எழுதி வெச்சேன்
ஒரு எழுது அரியாத
காத்து வந்து இழுப்பதும் என்ன
குத்து விளக்கொளிய சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே- ஒரு
முத்தம் நீ தருவாயா

குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன
இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும்
தெளியல

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு

படம் : பாரதி
பாடல் : மயில் போல
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: மு.மேத்தா
பாடியவர்கள் : பவதரணி

Read Full Post »


சின்ன மணிக் கோவிலிலே ஆடுதடி ஒரு விளக்கு
பொன்னுலகம் காண்பதற்கு ஏற்றி வைத்த திருவிளக்கு
தெற்கு திசை வழியே தென்றல் வருமோ
தீபம் விடும் சுடரைத் தீண்டி விடுமோ

(சின்ன மணிக் கோவிலிலே)

அந்தப் பக்கம் நண்பனடி இந்தப் பக்கம் தங்கையடி
சொன்னதோ பாதி சொல்லாதது மீதி
அந்தக் கண்ணில் கற்பனைகள்
இந்தக் கண்ணில் சஞ்சலங்கள்
ரெண்டையும் கண்டேன் நான்தான் இந்த நாளில்
எந்த வழி அமைப்பான் வானிருக்கும் தேவன்
அந்த வழி நடக்கும் மானிடரின் ஜீவன்
உன் வசம் என் வசம் என்னதான் இங்கே
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத் தானே

(சின்ன மணிக் கோவிலிலே)

நள்ளிரவு நேரத்திலே நட்டநடு வானத்திலே
வெள்ளி மீன் போலே நான்தான் உன்னைப் பார்த்தேன்
நித்தம் இங்கு வாசலிலே பாடி வரும் தென்றலிலே
உன் குரல் ஓசை நான்தான் என்றும் கேட்பேன்
அண்ணன் தங்கை உறவு இப்பிறப்பில் தொடக்கம்
இன்னும் இது தொடர்ந்து எப்பிறப்பும் இருக்கும்
வந்ததும் வாழ்ந்ததும் கொஞ்ச நாள் ஆகும்
உனக்காக நானே நலம் பாடுவேனே
தேவன் உந்தன் துணை வரத் தானே

(சின்ன மணிக் கோவிலிலே)

 

படம் : வண்ண வண்ணப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்

Read Full Post »


நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
கூடுதானே இன்று பாடுது
கூடு இன்று குயிலைத் தானே தேடுது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே யோகம் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது
காலம் என்னைக் கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகிப் போனது

நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்

 

படம்:- இதயக் கோயில்
வரிகள்:- வைரமுத்து
பாடியவர்:- எஸ் பி பாலசுப்ரமணியம்
இசை:- இளையராஜா
இயக்குனர்:- மணி ரத்னம்
வருடம்:- 1985

Read Full Post »